சிவாய நம
நமது கயிலை அறக்கட்டளையில், சிவபெருமானே ஆதி குருவாக இருந்து எடுத்துரைத்த சைவ சித்தாந்த சாத்திரக் கருத்துக்களைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆன்மீகத் தேடுதலில் ஈடுபாடு உள்ள அன்பர்கள் அனைவரும் முறையான இணைய வழிக் கல்வி , கூட்டு வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மெய்ஞானத்தைச் சாத்திரங்களில் உள்ளபடியே பிழையின்றிக் கற்றுக்கொள்ள வழி காட்டுவதே எமது முதலும் மற்றும் முக்கியமான பணியாகும்.
20000+
சிவனடியார்கள்
12 +
உலக நாடுகள் [இந்தியா [மையம்], மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள் (அமீரகம்), ஐரோப்பா, அமெரிக்கா இன்னும் பல]
60,000 +
சான்றிதழ்கள்
உங்கள் ஆன்மீகப் புரிதலை மெருகேற்ற கயிலை அறக்கட்டளையின் சிறப்புச் சான்றிதழ் பாடநெறிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன. சைவ சித்தாந்தத் தத்துவக் கோட்பாடுகள்,திருமுறைத் தோத்திரங்களைப் பாராயணம் செய்வது, மற்றும் தமிழ் வட்டெழுத்துக் கலை, கோவில் கட்டிடக் கலை (வாஸ்து சாஸ்திரம்) ஆகியவற்றில் நுட்பமான, வழிகாட்டும் பயிற்சிகளை கயிலை அறக்கட்டளை வழங்குகின்றது.
திருவாசகம், அபிராமி அந்தாதி போன்ற திருமுறை தோத்திர நூல்களின் பாராயணக் கூட்டு வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆன்மாவின் ஆன்மீகப் பயணத்திற்கு வலிமை சேர்த்திடுங்கள். மேலும் உடல் மற்றும் மனதைச் சமநிலைப் படுத்த உதவும் பாரம்பரிய யோக வகுப்புகளிலும் பங்கெடுத்துப் பயன் பெறுங்கள்.
பாராயணத்தைத் தாண்டி, ஆகமங்களின் ஆழமான அர்த்தங்களையும் தத்துவப் பொக்கிஷங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிகள் ஆன்மாவின் ஆன்மீகப் பயணத்தை நெறிப்படுத்துகின்றன. தெளிவான வழிகாட்டுதலுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள் , சைவ சித்தாந்தத்தை உங்கள் தினசரி வாழ்க்கையில் அர்த்தமுள்ள முறையில் இணைத்து க்க வாழ்வின் ஒரு அங்கமாக உணரச் செய்ய உதவுகின்றன.
மலேசியா நிகழ்வு
காஞ்சிபுரம் நிகழ்வு
சிவ திருமதி சுமதி மோகன்
திருப்பூர்
"நம் அறக்கட்டளை தான் அடியேனுக்கு இவர்கள் மட்டும் அல்லாமல் பல ஆசிரியர்கள் உதவி உள்ளார். அனைவருக்கும் அடியேன் மனம் மொழி மெய்களால் ஆன முக்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த கயிலை நாதருக்கும் கயிலை அய்யாவிற்க்கும் கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கை ஆக்குகின்றன."
சென்னை
"கயிலை அறக்கட்டளையில் நான் இணைந்த தருணமே மிகவும் ஒரு சுவாரசியமான நிகழ்வு. என்னைபற்றிய தேடுதலில் சுமார் 1 வருட தேடுதலுக்ககும் காத்திருபுக்கும் பின் வழிநடத்துவதற்கும் கிடைத்த சிவபொக்கிஷம் தான் கயிலை அறக்கட்டளை. உண்மையில் அம்மா ஐயனின் திருவருள் எப்படி இந்த கலியுகத்தில் அடியார்களை வழிநடத்துகிறார் என்பதை உணரமுடிகிறது."
சிவ திருமதி விஜயா
திண்டுக்கல்
"கயிலை அறக்கட்டளை மிகப் பெரிய கடல் அம்மா. அதில் நீந்தி செல்லலாம். கயிலை அறக்கட்டளையின் திட்டங்கள் அனைத்தும் அருமை, நிறைய விண்ணப்பங்கள் பூர்த்தியடைகின்றன. கயிலை அறக்கட்டளையில் இணைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா. தினமும் அதிகாலை எழுவதற்குகான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைக் கொடுத்த குருவருளுக்கும் திருவருளுக்கும் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்."